புதன், 28 மார்ச், 2018

பந்தயம்



இளமை வலுவுடன்
விரையும் நாள்
வேகத்தை
எட்டி நிறுத்த
எழுந்து ஓடினேன்.

முட்டி வலியில்
முதுமையை உணர்த்தி,

கட்டிலில் கிடத்திவிட்டு,

இன்று நேற்றாகிப் போகிற
நாளையாய்……..

காலம் மட்டும்
கடந்து போனது.


புது மானிடன். ஜூன் - ஜூலை 1986

வெள்ளி, 9 மார்ச், 2018

பாரதம்



சுதந்திர நாளில்
அட்டைக் கொடிகுத்தி
அகங்களித்து விளையாடும்
பள்ளிச் சிறுவனின்
சட்டை முதுகில்
தேசக் கிழிசல்.

புதுமானிடன் ஜுன்-ஜூலை 1986.