எண்ணிலவாய் இங்கே
இயங்குந் துறைபலவுள்
பெண்ணிலதாய் ஏதுளது பேசுதற்கு? –--- மண்ணில்
சரிநிகராய் ஆணுக்குச்
சற்றும் குறையா
உரிமையுடன் வாழ்தல் உவப்பு.
இருவிகற்ப நேரிசை வெண்பா 16.2.2023
புதிதாய் முளைத்த (க)விதைகள்
எண்ணிலவாய் இங்கே
இயங்குந் துறைபலவுள்
பெண்ணிலதாய் ஏதுளது பேசுதற்கு? –--- மண்ணில்
சரிநிகராய் ஆணுக்குச்
சற்றும் குறையா
உரிமையுடன் வாழ்தல் உவப்பு.
இருவிகற்ப நேரிசை வெண்பா 16.2.2023
காதல் உளங்கொள் உயர்நிலை அன்பு/
அன்பு உயிர்க்குணம் அதுவா உடற்பசி?
உடற்பசி பருவ உணர்வெனும் காமம்/
காமம் வேறு வேறது காதலே.
ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா. முதற்சீரும் இறுதிச்சீரும் ஒன்றிய
4 வரி அந்தாதி.
(ஆசிரியத்துறை)
புத்தகம் ஒன்றைப்
புரிதலோடு அனுகுதல் வாசித்தல்.
அறிவுப் பசிக்கு
அதுதரும் உணவை யாசித்தல்.
தன்முனைக் கவிதை. சமூகச் சூழல். வரிக்கு 2 அல்லது 3 சொற்கள். 4 வரிகள். 2ஆவது வரி பொருள் முடிவு. பிற்பகுதி; ஒட்டியோ வெட்டியோ அமையும்படி எழுதியது..
முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- பதிவு
காரிருளில் குப்பைக்குள்
கையோட்ட மாட்டோமால்
நாறும் கசடொழிய
நம்நெஞ்சைக் கிள்ளிக்
களைவதற்கோ ராசையிலை
கற்றிலமே கண்டு
விளைவதனை யஞ்சுதல் வீண்
சந்தவசந்த முகநூல் குழுமத்தில் எழுதிய இன்னிசை வெண்பா. 22.2.2021
திருவிழா நகரினில் தோரணத் தெருக்கள்./
தெருக்களில் உலவுவோர் திரளென இருப்பர்./
இருப்பவர் அருந்துவர் அறுசுவை விருந்து./
விருந்தொடு நிறைவுறும் ஊர்த்திரு விழாவே.
அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- முகநூல் பதிவு
முதற்சீரும் இறுதிச்சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி
படக் காட்சியை ஒட்டிய கலி விருத்தம்.
விளம் விளம் விளம் மா
1.2.2025
சிந்தை ஆசையோடு கூடி முயங்கியதில்/
எண்ணங்கள், வெறும் பிண்டங்களாய்ப் பிறந்தன./
சேர்த்து வளர்த்தெடுக்க முயற்சி முன்வந்தது./
ஆசையின் தூண்டலால், ஏற்றிவிடும் ஏணியாய்/
உழைப்பும் உவப்புடன் துணை நின்றதால்,/
தடைகளைக் கடந்து பிண்டநிலை மாறி, /
எண்ணம், செயலாகி எழிலுடன்/
எழுந்து நின்று, ஏற்றம் பெற்றது.
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை முகநூல் பதிவு
முயற்சி தொடக்கமே. ஆயின் முடிவு?
முடிவும் அதுவெனில் யாதுள ஆக்கம்?
ஆக்கம் நிகழ அவசியம் செய்திறன்.
செய்திறன் இல்லையேல் சாகும் முயற்சியே
அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல்
முதற்சீரும் இறுதிச் சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி 3.1.2025
காட்சிப் படத்துக்கு