வெள்ளி, 28 செப்டம்பர், 2018

நிழற்படம்




கம்பிகளிடையே
கதிரவன் புகுந்ததால்
கைதாகிப்போன
காந்தியை,
ஜன்னலை மூடிச்
சிறை மீட்டேன்.

சனி, 1 செப்டம்பர், 2018

லாட்டரி




எங்கோ நடந்த
குழப்பமான குலுக்கலில்
எண்கள் தொலைந்து போனதால்
பர்ஸ் தந்த
பத்திரமான வாழ்வை
நிலையாய் இழந்து
ஜன்னலுக்கு வெளியே
பரிசாய்
வீதிக் கழுதைக்கு
விழுந்தது
சீட்டு.