பத்தாண்டுகளுக்குப்
பின்
பழைய
ஊர்.
’வணக்கம்
சார்’
வருகைப்
பதிவு
பாராட்டு
பதவி
உயர்வு
எதுவும்
இனி இல்லை.
என்வீடு
திரும்பியாயிற்று
என்றாலும்,
தலை
வாசல் நிலை மரத்தில்
செதுக்கிய
கிளைகளில்
இலைகளாய்ப்,
பூவாய்க்,
காயாய்,
முந்நாள்
நிகழ்வுகள்
நிழலாகி
நிற்கின்றன நெஞ்சில்!
மனிதநேயம்
ஏப்ரல் 2005