’சார்
யாரு?’
அப்பாவின்
நெஞ்சு வலி சொல்லி, உன்
அவசரச்
செலவுக்கு
ஆயிரம்
கடனாய்க் கேட்டு,
அழாத
குறையாய்க்
கையேந்தி
நின்றபோது ஒன்று;
நான்
கேட்டபோது
இல்லையென்று
வாய் பொய்சொல்ல
முகம்
காட்டிக்கொடுத்து விடாதபடி
மூடிக்கொண்ட
மற்றொன்று;
பள்ளியில்
பையனைச்
சேர்க்க
உதவமறுத்து,
உதாசீனப்படுத்தியது
இன்னொன்று;
என்று
உன்
மூடிமுகங்களை யன்றி
உன்னை
அறியாமலேயே…..
’இவர்
சோமசுந்தரம். பள்ளி ஆசிரியர்.
என்
நெருங்கிய நன்பர்.’
மனித
நேயம். மார்ச் 2005.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக