சனி, 22 நவம்பர், 2025

வள்ளுவம்

வள்ளுவம் மறையே. வாழ்க்கையின் நெறிநூல்.

நெறிநூல் யாவினும் நெடுநாள் முன்னது.

முன்னதாய்ப் பிறந்த முப்பால் ஈரடி.

ஈரடி அளிக்கும் இன்பம் வள்ளுவமே.

 

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

முதற்சீரும் இறுதிச் சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி

ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா 18.1.2025

மரியாதை

 

 

மரியாதை வயதளவில் மூத்தோரைப் பணிந்தொழுகல்

பணிந்தொழுகல் உளதாயின் பண்புடைமை உறவறியும்

உறவறியும் முன்னரதை ஊரறிந்து போற்றவரும்

போற்றவரும் பெருநிதியம் பெறுகின்ற மரியாதை.

 

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல் பதிவு

முதற்சீரும் இறுதிச்சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி

படக் காட்சியை ஒட்டிய பிரிந்திசை துள்ளல் ஓசையுடைய

தரவு கொச்சகக் கலிப்பா 11.1.2025