ஞாயிறு, 24 நவம்பர், 2024

பூவும் பூச்சியும்

 


பட்டாம் பூச்சி பறந்து வந்து

செடியில் அமர்ந்தது.— அது

பார்க்கும் போது பூவைப் போல

அழகாய் இருந்தது.

 

தொட்டுப் பார்க்க எண்ணிக் கையைத்

தூக்கி நெருங்குமுன் – அது

பட்டுச் சிறகு இதழை விரித்துப்

பறந்து போனது.

 

பூ இதழ் போலச் சிறகுகள் என்றால்

பூச்சி வாடிப் போய்விடுமோ?

பூவும் தனது இதழை விரித்துப்

பறந்து ஓடிப் போய் விடுமோ?

 

எட்ட இருந்து பார்க்கும் போது

இரண்டும் ஒன்றாய் இருந்தாலும்,

பட்டாம் பூச்சி வாடாது.

பறக்கும் பூவும் கிடையாது.

 

பாரதி கலைக்கழகம், அழ.வள்ளியப்பா நினைவரங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக