செவ்வாய், 14 ஏப்ரல், 2026

முயற்சி

 

முயற்சி தொடக்கமே. ஆயின் முடிவு?

முடிவும் அதுவெனில் யாதுள ஆக்கம்?

ஆக்கம் நிகழ அவசியம் செய்திறன்.

செய்திறன் இல்லையேல் சாகும் முயற்சியே


அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல்

முதற்சீரும் இறுதிச் சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி 3.1.2025

 காட்சிப் படத்துக்கு

வண்ணத் தூரிகை


வண்ணத் தமிழ்ந்து

வரைதிரை படிந்து

எண்ணத் துள்ளதை

எழிலொடு எழுத

இன்னொரு கையே

தூரிகை ஆமே.


அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை – முகநூல்

 காட்சிப் படத்துக்கு 7.1.2025

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா