வெள்ளி, 30 அக்டோபர், 2026

மண்ணைப் பொன்னாக்கும் வித்தகன்

 உறவாடிச் சேற்றோ(டு) உழுது நட்டு

மறவாது மடைநீர் மாற்றி வேண்டும்

உரமிட்டுப் பொன்னாக மிளிரும் செந்நெல்

முளைத்தது மண்ணின் ஈரத் தாலே

விளைத்தது உழவன் மேனியின் ஈரமே. 


முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை

நிலைமண்டில ஆசிரியப்பா 13.3.2025                                                            

சனி, 17 அக்டோபர், 2026

தோள் கொடுக்கும் தோழமை

 

பகிர்ந்து துயரினைப் பாதியாய்க் குறைத்தலும் 

மகிழ்வினை இரண்டு மடங்கென ஆக்கலும 

தோளொடு நின்று தோழமை செய்யுமே. 

 

முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை 

3 வரி. ஆசிரியத் தாழிசை 12 3. 2025    

நாகாக்க என்றும் நயந்து

 நாகாக்க என்றும் நயந்து.

 பொய்யால் புரட்டால் புறப்பேச்சால் புன்சொல்லால்

மெய்யாய் உளதெதுவும் மாறாதே --- செய்வானேன்?

நோகாக்க, சொல்லழுக்கால் நாக்கழுக, வேண்டுவதா?

           நாகாக்க என்றும் நயந்து

திங்கள், 5 அக்டோபர், 2026

நிர்வாகம்


ஓர்ந்து உள்ள வளத்துக்கு 
உயர் பயன் அடைதல்.
தேர்ந்து பிறரைப் பயிற்றுவித்துப் 
பணி முடிக்கும் பணி.

தன்முனைக் கவிதை. 
வரிக்கு 2 அல்லது 3 சொற்கள். 4 வரிகள்.
2ஆவது வரி பொருள் முடிவு. பிற்பகுதி; ஒட்டியோ வெட்டியோ
அமையலாம்.