துளிர்கள்
புதிதாய் முளைத்த (க)விதைகள்
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026
கவர்ந்திழுக்கும் நெல்மணிகள்
மண்தரு நெல்மணி மலிந்துள வயற்புறம்
உண்பதற் கங்குவந் துலவிடும் பறவைகள்
பொன்னிது உண்கிற பொருளிலை யோஎனக்
கண்கவர் கதிர்களைக் கண்டதில் மயங்கியே
விண்ணிலே வலம்பல வருநிலை யினவோ?
ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா. படக் காட்சிக்கு எழுதியது.
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026
கண்ணதாசன்
கண்ண தாசன் கனித்தமிழ்க் கவிஞன்
கவிஞரில் அரசன் காவியம் படைத்தவன்
படைத்தவன் இடத்தில் பக்தியில் நிலைத்தவன்
நிலைத்தினும் நிற்பவன் கண்ண தாசனே.
முதற்சீரும் இறுதிச்சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி
முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை
22.2.2025
ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)