உயிரை முதலாக்கி
மெய் சேர்த்து,
உயிர்மெய்யாய் உலவவிட்டவள்
அ ம் மா.
எதற்காக என்று தெரியாவிட்டாலும்,
அடித்தது அவள்தான் என்று
அறிந்திருந்தும் கூட,
அவள் கால்களைச்சுற்றிக்
கைகளால் கட்டிக்கொண்டு அழும்போது,
அம்மா.. அம்மா..அம்மா.
வீதியில்
கல் இடறக் கால்வலிக்கும் போது,
அம்மாஆஆஆ
கடுங்கோடை வெய்யில் வழியில்,
காற்றுள்ள, நிழல் கிடைத்தபோது,
அம்ம்ம்ம்மா
கஷ்டத்திலும் சுகத்திலும்
அவள் பெயரையே உச்சரித்துப்
பழகியாயிற்று.
அவள், இனி இல்லை என்றாயிற்று.
இனியும்,
அவள் பெயர் உச்சரிக்கப் படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக