புதிதாய் முளைத்த (க)விதைகள்
கள்ளத்தால் பொய்மையால்
கையூட்டால் காரியங்கள்
கொள்ளல் திறனென்பார்
கொள்ளாரே --- உள்ளத்தில்
தூய்மையுளோர் தங்கட்கே
தாமுரைத்த பொன்மொழிதான்
‘வாய்மையே வெல்லும் வழி’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக